சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் அண்ணாமலையின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.... மனைவி, மகன்களுடன் பிரபலம்
பிரபல சீரியல்
நல்ல கதைக்களம் உள்ள தொடரை மக்கள் எப்போதும் கொண்டாட தவறியதில்லை. அப்படி தான் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக உள்ளது சிறகடிக்க ஆசை.
இந்த தொடரில் ஒரு பிரச்சனை முடிந்ததும் அடுத்த பிரச்சனை, யாராவது தவறு செய்தால் உடனே அவர்களின் உண்மை முகம் வெளியே தெரிவது என விறுவிறுப்பின் உச்சமாக இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதியா இது, பல வருடங்களுக்கு முன் எப்படி உள்ளார் பாருங்க.. வைரலாகும் போட்டோ
தற்போது முத்து-மீனா க்ரிஷ்ஷை தத்தெடுக்கும் முயற்சியில் இருக்க அவர்களை எப்படியாவது தடுக்க வேண்டும் என ரோஹினி, விஜயாவை பயன்படுத்தி ஏதோ பிளான் செய்கிறார், கடைசியில் இந்த விவகாரம் எப்படி முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
சுந்தர்ராஜன்
இந்த தொடரில் குடும்ப தலைவனாக மிகவும் அமைதியான, நேர்மையான ஒரு கதாபாத்திரமாக அண்ணாமலை என்ற வேடத்தில் நடித்து வருகிறார் சுந்தர்ராஜன். இவருக்கு அறிமுகம் என்பது தேவையில்லை,
நடிகர், இயக்குனர், எழுத்தாளர், காமெடியன் என பன்முகம் கொண்டு விளங்கியவர் இப்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.