கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவி சீரியல்கள் என்று எடுத்தாலே முதலில் நியாபகம் வருவது சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, மகாநதி போன்ற தொடர்கள் தான்.
ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, ஒவ்வொன்றும் ஒருவிதமான கதைக்களங்களை கொண்டது.
இப்போது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். முதல் திருமணத்தை மறைந்த ரோஹினி பற்றிய முழு உண்மை இப்போது குடும்பத்தினருக்கு தெரிய வந்துவிட்டது.
இதனால் கோபத்தில் விஜயா, ரோஹினியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார், தற்போது விவாகரத்து வாங்க எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.

கொண்டாட்டம்
சீரியலில் ரோஹினி-மனோஜிற்கு விவாகரத்து கொடுக்கவே கூடாது என்ற முடிவில் உள்ளார். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் சிந்தாமணியிடம் கூறியிருக்கிறார்.
இன்றைய எபிசோடில், விவாகரத்து வழக்கு வர ரோஹினி நன்றாக தனது பக்கம் நியாயம் இருப்பது போல் பேசுகிறார். முத்து-மீனா, ரோஹினி விவாகரத்து வழக்கிற்கு சாட்சியாக வருகிறார்கள்.
அடுத்து கதையில் என்ன நடக்கும் பரபரப்பின் உச்சமாக செல்ல, இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதாவது சீரியல் தொடங்கி 3 வருடங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் ஒன்றாக இணைந்து பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.
அந்த வீடியோ இதோ,