ரூ 60,000 பணம் கட்டினேன், ஆனால் யாருமே வாய்ப்பு தரவில்லை: சிறகடிக்க ஆசை நடிகையின் கண்ணீர்
சிறகடிக்க ஆசை
தமிழ் நெஞ்சங்களை கொள்ளைக்கொண்டு வெற்றி நடைபோடும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடிக்கும் நாயகன் முத்துவிற்காகவே பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.
மேலும், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் எல்லோருக்கும் நல்ல பெயர் கிடைத்து வருகிறது. இப்போது கதையில் மனோஜை ஏமாற்றி பணம் கொண்டு சென்ற ஜீவா மீண்டும் இந்தியா வருகிறார், மீனாவின் காரில் தான் பயணம் செய்கிறார்.
அவர் யார் என்பதை கண்டு பிடித்து பணத்தை மீண்டும் அண்ணாமலை குடும்பம் பெறுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
நடிகையின் வேதனை
இந்த சீரியலில் நடிக்கும் ரேவதி பாட்டிக்கும் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், தனக்கு டப்பிங் பேச மிகவும் பிடிக்கும். அதன் காரணமாகவே அந்த காலத்திலேயே ரூ 60,000 கட்டி டப்பிங் யூனியனில் சேர்ந்தேன்.
ஆனால், யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லை, ஒருவேளை நான் நடிகை என்பதைதே மறந்துவிட்டார்கள் போல என கூறியுள்ளார்.