சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்- யாருக்கு என்ன விஷயம் தெரியுமா?
சிறகடிக்க ஆசை
எதார்த்தமான கதைக்களத்தோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப கதை தான் சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா இவர்கள் தான் கதையின் முக்கிய கரு, இவர்களை சுற்றிய கதையாக தான் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாகிறது.
ஜீவாவிடம் இருந்து பணத்தை பெற்ற மனோஜ்-ரோஹினி வீட்டில் பொய் சொல்லி தப்பிக்கிறார்கள், ஆனால் முத்துவிற்கு மட்டும் ஒரு சந்தேகம் உள்ளது.
இதில் வேறு ஜீவாவிற்காக சாட்டி கையெழுத்து எல்லாம் போட்டுள்ளார், இதனை வைத்து முத்துவிடம், மனோஜ்-ரோஹினி சிக்கினாலும் உண்டு. எப்படி கதையை கொண்டு செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
புதிய வாய்ப்பு
இந்த தொடரில் ரோஹினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் சல்மா. இன்ஸ்டாவை திறந்தாலே மக்கள் திட்டுகிறார்கள், இதனால் கமெண்ட் பிளாக் செய்து வைத்துள்ளேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது இவர் குறித்து என்ன தகவல் என்றால் இவருக்கு சன் டிவியில் முக்கிய சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
அதில் நெகட்டீவ் கதாபாத்திரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றபடி தொடர் பற்றிய விவரத்தை அவர் கூறவில்லை, ஆனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.