விஜய் டிவியின் வேறொரு தொடரில் கமிட்டாகியுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... யார், என்ன தொடர் பாருங்க
சிறகடிக்க ஆசை
விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயர் ரசிகர்கள் அப்போதெல்லாம் இருந்தது.
ஆனால் அவர்கள் நோ நோ, நாங்கள் சீரியல்களிலும் கெத்து காட்டுவோம் என இப்போது நிரூபித்து வருகிறார்கள்.
சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள், மகாநதி என ஒவ்வொரு தொடரும் விதவிதமான கதைக்களத்தை கொண்டு டாப் சீரியல்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

மாற்றம்
தற்போது விஜய் டிவியின் ஒரு சீரியலில் துணை கதாபாத்திர மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மதிய நேரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று சக்திவேல்.
இதன் முதல் பாகம் முடிவடைய 2ம் பாகம் நாயகன், துணை கதாபாத்திரங்கள் மாற்றத்துடன் புதிய கதாபாத்திர என்ட்ரியுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் அன்பு செழியன் அம்மாவாக சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் சுதா புஷ்பா இனி நடிக்க உள்ளாராம்.