ரோஹினிக்கு கடையை தொடர்ந்து அடுத்த செக் வைத்த விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலின் எபிசோடில், விஜயா ரோஹினியை கடைக்கு செல்ல கூடாது என கூறிய விஷயம் அண்ணாமலைக்கு மற்றும் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது.
இதுகுறித்து வீட்டில் அனைவரும் பேச ரோஹினி நல்ல பெண் போல் ஆன்ட்டி சொல்வதையே நான் கேட்கிறேன், யாரும் பேச வேண்டாம் என்கிறார். விஜயா ஷோரூமுக்கு கண்டிப்பாக போக கூடாது, மனோஜே கடையை தனியாக பார்த்துக் கொள்வான், அவனுக்கு திறமை உள்ளது.
ஆனால் ரோஹினி கடைக்கு செல்ல கூடாது என்கிறார். பின் ரோஹினி, ஸ்ருதி கொடுத்த ஆபரை ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார்.
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், ரோஹினி வேலைக்கு சென்று வீட்டிற்கு வருகிறார். அந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் என விஜயா கேட்க அவர் 25 ஆயிரம் என்கிறார்.
உடனே விஜயா அந்த பணத்தை கொடு என கேட்க அக்கவுண்டில் தான் அனுப்பினார்கள் என கூற இனிமேல் உன்னுடைய ATM கார்ட் என்னிடம் இருக்கட்டும் என கூறுகிறார். இதனால் ரோஹினி கடும் ஷாக் ஆகிறார்.

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri
