கோபத்தில் நீதுவை பளார் விட்ட மீனா, சிந்தாமணியின் அடுத்த மோசமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய்யின் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் எல்லாம் பரபரப்பான தேர்தல் பிரச்சாரம் நடந்தது.
மீனா Vs சிந்தாமணி, இவர்களில் யார் ஜெயிப்பார் என்ற கேள்வி, தேர்தல் என்றாலே பிரச்சனை இருக்கத் தானே செய்யும், அதுவும் கதையில் நடந்தது.
சிந்தாமணி ஆட்களை வைத்து மீனாவை கத்தி குத்து எல்லாம் வாங்க வைத்தார், ஆனால் அவர் எதற்கும் பயப்படாமல் தேர்தலில் நின்று இப்போது ஜெயித்துவிட்டார். மீனாவின் வெற்றியை ஏற்க முடியாத சிந்தாமணி அடுத்து அவரது பெயரை கெடுக்க பிளான் போடுகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், அதாவது, மீனா இந்த பதவியில் நீண்டநாள் இருக்க மாட்டாள், சங்க தலைவியாக இருக்க நிறைய பிரச்சனைகள் உள்ளது.
அங்கு பதவியில் இருப்பவர்களை நான் என் வழிக்கு கொண்டு வந்து மீனா தவறானவர் என்பதை காட்டி மீண்டும் நான் தேர்தல் நடத்தி அந்த பதிவியை கைப்பற்றுவேன்.

அவளுக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியாது, அவளிடம் தவறான பைலில் கையெழுத்து வாங்கி அவள் ஊழல் செய்துள்ளாள் என சங்கத்தில் இருந்து நான் தூக்கி எறிவேன் என ரோஹினியிடம் கூறுகிறார்.
பின் ரவி-ஸ்ருதி இருவரும் சுற்றுலா சென்றுள்ளதால் அவர்களது ரெஸ்டாரன்டை முத்து-மீனா பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் ரெஸ்டாரன்ட் வந்த நீது, ரவி எங்கே போன் செய்தால் ஸ்விட்ச் ஆப் வருகிறது என கோபமாக கேட்கிறார்.

உடனே மீனா-முத்து இருவரும் ரவி இங்கு இல்லை எதற்கு அவரை கேட்கிறாய் என்கின்றனர். அதற்கு எனது வாழ்க்கையில் முக்கிய நாள், நான் Flower Shop திறக்கிறேன், ரவி இல்லாமல் எப்படி கடையை திறப்பேன் என்கிறார்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நீது, முத்துவை குடிக்காரன், ரவுடி என மோசமாக பேச மீனா கோபத்தில் அவரை அடிக்கிறார்.
You May Like This Video