மீண்டும் வம்பை விலைக்கு வாங்கும் முத்து.. அடுத்த பிரச்சனையா, சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் பரபரப்பான சிட்டி-சத்யா பிரச்சனை இந்த வாரம் இதுவரை முடிந்துள்ளது.
சிட்டி சத்யாவிற்கு போதை ஊசி போட்டு அவனை பரீட்சை எழுத விடாமல் செய்ய பிளான் போட எப்படியோ முத்து காப்பாற்றி விட்டார். இப்போது அடுத்து மீனா-சிந்தாமணி பிரச்சனை தொடங்கியுள்ளது.
பெரிய ஆர்டர் கிடைக்க மீனா தற்போது பணம் இல்லாமல் தவிக்கிறார். அதற்காக முத்து, அண்ணாமலையிடம் உதவிக்கு ஏதோ கேட்க அதற்கு உடனே விஜயா ஏதோ சொல்லி அவர்களை கோபப்படுத்துகிறார்.
மேலும் இன்றைய எபிசோடில் சீதா தனது அம்மாவை தான் காதலிப்பவர் வீட்டிற்கு அழைத்து சென்று உதவி செய்ததற்கு நன்றி கூறுகிறார்.
புரொமோ
அடுத்து நாளைய எபிசோடிற்கான கதைக்களத்தில் முத்து காரை ஓட்டிக்கொண்டு வர அவருடன் ஏற்கெனவே சண்டையில் இருக்கும் போலீஸ் வந்து குடித்துவிட்டு வந்தாயா ஊது என கேட்க முத்து முரண்டுபிடிக்கிறார். இதோ புரொமோ,

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
