ரோஹினியை அடிக்க சென்ற விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை டுவிஸ்ட் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் பரபரப்பின் உச்சமாக கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜயா-ரோஹினி பிரச்சனையை தீர்க்க அண்ணாமலை தனது அம்மா தான் சரியான ஆள் என அவரை வீட்டிற்குள் அழைத்து வருகிறார். பாட்டி வீட்டிற்கு வந்ததும் மனோஜிற்கு அறிவுரை கூறுகிறார், அதோடு ரோஹினி, விஜயாவை வீட்டிறகு வர கூறுகிறார்.
ரோஹினி, நான் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் ஒரு கண்டிஷன், யாரும் என்னை அடிக்க, திட்டக் கூடாது, என்னை கேள்வி கேட்க உனக்கு மட்டும் தான் உரிமை உண்டு என்கிறார்.
புரொமோ
பின் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், வீட்டிற்கு வந்த ரோஹினியை பார்த்ததும் விஜயா செம கோபத்தில் மாறி மாறி அடிக்கிறார்.
திடீரென மனோஜ், விஜயாவை பார்த்து ரோஹினியை அடிக்காதீர்கள், அந்த விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என கூறி ஷாக் கொடுக்கிறார்.
உடனே விஜயா செம கோபத்தில் மனோஜை அடித்து பொய் கூறாதே என அடிக்கிறார். இதோ புரொமோ,