ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்
சிறகடிக்க ஆசை
ரோஹினியிடம் விவாகரத்து வாங்கி மனோஜிற்கு மறுமணம் செய்து வைத்தே ஆவேன் என்ற முடிவில் உள்ளார்
ரோஹினி-மனோஜ் விவாகரத்து வழக்கில் ரோஹினிக்கு ஆதரவாக தான் தீர்ப்பு இப்போது உள்ளது. அதாவது ரோஹினி செலவிற்கு மனோஜ் மாதம் பணம் தர வேண்டும் என்றும் தனியாக வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளார்.

6 மாதத்திற்கு இவர்களின் விவாகரத்து வழக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வீட்டில் மறைந்து விஜயா மனோஜிற்கு நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார். ஆனால் எப்படியோ ரோஹினிக்கு இந்த விஷயம் தெரியவர அவர் அப்படியே நாடகம் போட்டு அந்த பெண்ணின் மனதை கலைத்துவிட்டார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த அமெரிக்க குடும்பம் அண்ணாமலையை மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். இந்த வீட்டிற்கு பெரியவர் நீங்கள் இப்படி பொய் சொல்லலாமா என கேட்க அண்ணாமலை அப்படியே ஷாக் ஆகிறார்.

பின் நீதிமன்றத்தில் நடந்த விஷயத்தை அவர்கள் கூற விஜயா அப்போதும் நான் தவறாக சொல்லவில்லை என விஜயா சமாளிக்கிறார். பின் அந்த பெண் வீட்டார் மோதிரத்தை திருப்பி கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள்.
அண்ணாமலை கோபத்தில் விஜயாவை அடிக்க செல்கிறார் ஆனால் முத்து தடுத்துவிடுகிறார். அவர் என்னை கேட்க கேள்வி அசிங்கமாக உள்ளது, உயிர் விட்டதற்கு சமம் என மனம் நொந்து பேசுகிறார்.
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், முத்து மீனாவை கத்தியால் குத்தியவரை பார்த்து பிடித்து யார் அனுப்பியது என கேட்கிறார், அவர் சிந்தாமணி சொல்லி தான் இப்படி செய்தேன் என்கிறார்.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu