பொய் கையெழுத்து போட்ட மனோஜ், விஜயாவிற்கு பளார் என அடி கொடுத்த அண்ணாமலை... சிறகடிக்க ஆசை சீரியல்

By Yathrika Apr 23, 2026 09:00 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

மனோஜிற்கு அமெரிக்க பெண்ணுடன் திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று விஜயா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பை அப்படியே வீட்டில் மறைத்துவிட்டார்.

ஆனால் ரோஹினியால் உண்மை வெளியே வர விஜயா அண்ணாமலையிடம் வசமாக சிக்கினார். ஏன் இப்படி செய்தாய் என விஜயாவிடம் அண்ணாமலை கோபப்பட நமது மகனின் வாழ்க்கைக்காக தான் இப்படியெல்லாம் செய்தேன் என கூறி சமாளித்தார்.

பொய் கையெழுத்து போட்ட மனோஜ், விஜயாவிற்கு பளார் என அடி கொடுத்த அண்ணாமலை... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial April 23 Episode

எபிசோட்

அந்த பிரச்சனை அப்படியே முடிய மீனாவை கத்தியால் குத்தியவரை முத்து கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைக்க சிந்தாமணி கைது செய்யப்பட்டார். ஆனால் தனது கணவரின் உதவியால் வெளியே வந்த சிந்தாமணி கோபத்தில் முத்து-மீனாவை பழி வாங்க வீட்டை அடமானம் வைத்த விஷயத்தை கையில் எடுக்கிறார்.

பொய் கையெழுத்து போட்ட மனோஜ், விஜயாவிற்கு பளார் என அடி கொடுத்த அண்ணாமலை... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial April 23 Episode

இன்றைய எபிசோடில், பைனாச்சியருடன் வீட்டிற்கு வந்த சிந்தாமணி, என் பதவி, மரியாதை எல்லாம் போனதால் என்னை நம்பாமல் பைனான்சியர் உங்களுக்கு கொடுத்த பணத்தை கேட்கிறார் என குண்டை தூக்கிப்போடுகிறார்.

அண்ணாமலை நீங்கள் எங்கே பணம் வாங்கி கொடுத்தீர்கள், இந்த பைனான்சியரிடம் வாங்கிய ரூ. 30 லட்சத்திற்கு வட்டி கட்டிக்கொண்டு தானே வருகிறோம் என்றார்.

உடனே பைனான்சியர் என்னது ரூ. 30 லட்சமா, மேலும் உள்ள ரூ. 18 லட்சத்தை யார் கணக்கில் எடுப்பார், மொத்தம் ரூ. 48 லட்சம் என்கிறார். இதனைக்கேட்டதும் குடும்பமே செம ஷாக் ஆகிறார்கள்.

பொய் கையெழுத்து போட்ட மனோஜ், விஜயாவிற்கு பளார் என அடி கொடுத்த அண்ணாமலை... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial April 23 Episode

அடுத்தடுத்து பைனான்சியர், வீட்டுப் பத்திரத்தை என்னிடம் அடமானம் வைத்து விஜயா மனோஜ் பணம் வாங்கியதை கூற அண்ணாமலை கையெழுத்தை மனோஜ் நான் தான் போட்டேன் என முத்துவிடம் அடி வாங்கிய பிறகு கூறுகிறார்.

ஏன் இவ்வளவு கேவலமான வேலை செய்தாய் என ரவி திட்ட அம்மா கூறி தான் இப்படி செய்தேன் என்கிறார். இதனைக் கேட்டதும் அண்ணாமலை கோபத்தில் மனோஜை வெளுத்து வாங்குகிறார்.

பொய் கையெழுத்து போட்ட மனோஜ், விஜயாவிற்கு பளார் என அடி கொடுத்த அண்ணாமலை... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial April 23 Episode

பின் நாளைய எபிசோடின் புரொமோவில், பணத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு என அண்ணாமலை, விஜயா, முத்து, மீனா என 4 பேரிடமும் பைனான்சியர் கையெழுத்து வாங்குகிறார். அவர் சென்ற பிறகு விஜயா அண்ணாமலையிடம் பேச செல்ல அவர் பளார் என அடிக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US