வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது பரபரப்பான கதைக்களம் செல்கிறது.
அதாவது விஜயா மற்றும் மனோஜ், சிந்தாமணி பேச்சைக் கேட்டு தங்களது வீட்டை அடமானம் வைத்தார்கள், அதற்காக மனோஜ் அண்ணாமலை கையெழுத்தை திருட்டுத்தனமாக போட்டு கொடுத்தார்.
அந்த உண்மை இப்போது வெளியே வந்துவிட்டது. நேற்றைய எபிசோடில், விஜயா மனோஜ் இருவரும் சேர்ந்து பொய் கையெழுத்து போட்டு வீட்டை அடமானம் வைத்த விஷயம் தெரியவர அண்ணாமலை மனோஜை வெளுத்து வாங்குகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், கடன் கொடுத்தவர் இப்போதே எனக்கு என் பணம் வேண்டும். இப்போதே என் பணத்தை எடுத்து வையுங்கள் என கூற அண்ணாமலை எனக்கே தெரியாமல் இப்படி செய்துள்ளார்கள் என புலம்புகிறார்.
அந்த நேரத்தில் சிந்தாமணியும் இவர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா என எனக்கும் அதிர்ச்சியாக உள்ளது என்கிறார். கடன் கொடுத்தவர் இப்போதே என் பணம் வேண்டும் என கேட்க முத்து-மீனா அண்ணாமலைக்காக கெஞ்சுகிறார்கள்.
பின் முத்து 1 வருடம் நேரம் கொடுங்கள் என கேட்க அவரோ 30 நாட்களில் எனக்கு என் பணம் வேண்டும் என்கிறார். அடுத்து முத்து எனக்கு 3 மாதம் நேரம் கொடு என கேட்க அவர் ஒப்புக்கொள்கிறார்.

நாளைய எபிசோட் புரொமோவில், மனோஜ் எந்த கவலையும் இல்லாமல் பிரியாணி வாங்கிவந்து சாப்பிடுகிறார். அதைப்பார்த்த லிஜயா கோபத்தில் அடிக்கிறார்.
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan