பணம் தொலைந்த விஷயம் குறித்து முத்து சொன்ன விஷயம், பயப்படும் ரவி.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இப்போது கதையில் மீனா அவரது தொழிலில் வளரவே கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் விஜயா.
மண்டப ஆர்டர் விஷயத்தில் மீனா பணம் ரெடி செய்த விஷயத்தை சிந்தாமணியிடம், விஜயா போட்டுக் கொடுத்தார்.
உடனே சிந்தாமணி, மீனா பணத்தை திருட ஏற்பாடு செய்துவிட்டு அந்த மண்டப ஆர்டரை கைப்பற்றிவிட்டார். பணம் தொலைந்து அடிபட்டு வீட்டிற்கு வந்த மீனாவை பார்த்து சந்தோஷத்தில் உள்ளார் விஜயா.
புரொமோ
இன்றைய எபிசோடில் முத்து, மீனா தொலைத்த பண விஷயமாக விசாரித்து அலைகிறார். சிந்தாமணி தான் இதற்கு பின்னால் இருக்கிறார் என்பது மட்டும் தான் முத்துவிற்கு தோன்றுகிறது ஆனால் ஆதாரம் ஒன்றும் இல்லை.
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், ரவி, ஸ்ருதியை CBI அதிகாரியாக சிந்தாமணி வீட்டிற்கு போக சொல்ல அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் இதைவிட்டால் வேறு வழி இல்லை இப்படி செய்து தான் ஆக வேண்டும் என்கிறார் முத்து.
You May Like This Video