போலீசாரால் கைதான ரோஹினி, உண்மையை கூறிய மீனா... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற வசனத்திற்கு ஏற்ப இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு விஷயம் நடந்துள்ளது.
இன்றைய எபிசோடில், முத்துவை கைது செய்து போலீசார் ஜெயிலில் அடைக்கிறார்கள். அங்கு எதர்சையாக வந்த அருண், முத்து முன் நல்லவன் போல் பேச பின்னாடி சென்று போலீசாரிடம் முத்துவை விடாதீர்கள் என கூறுகிறார்.
இதற்கு இடையில் மீனா, முத்துவை வெளியே கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்ய கடைசியில் முத்து ஜெயிலில் இருப்பதற்கு காரணம் சிட்டி என தெரிந்துகொள்கிறார்.
இந்த உண்மையை மீனா போலீசாடம் கூற, அவர்கள் சிட்டியை கைது செய்து அடிக்கிறார்கள்.
அப்போது இந்த சம்பவத்திற்கு காரணம் ரோஹினி தான் கூற மீனா-முத்து ஷாக் ஆகிறார்கள்.
புரொமோ
சிட்டி சொன்னதால் அண்ணாமலை வீட்டிற்கு வந்து ரோஹினியை போலீசார் கைது செய்கிறார்கள். பின் மீனா என்ன விஷயம் என்ற உண்மையை வீட்டில் உள்ள அனைவரிடத்திலும் கூறுகிறார்.