க்ரிஷை இடம் மாற்றிய ரோஹினி, முத்து, மீனாவிற்கு வந்த சந்தேகம்... சிறகடிக்க ஆசை அடுத்த கதைக்களம்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு விஷயத்தின் கதைக்களம் தான் சென்று கொண்டிருக்கிறது.
வேறு என்ன ரோஹினி பாத்து பாத்து மறைத்து வைக்கும் க்ரிஷ் விஷயம் தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் க்ரிஷ் நான் எங்கும் செல்லவில்லை என வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கெஞ்சுகிறார்.
மனோஜ் பக்கம் வெறும் 2 ஓட்டுகள் தான், ஆனால் முத்து பக்கம் 5 ஓட்டு இதனால் க்ரிஷ் இங்கே தான் இருப்பார் என்கிறார்.
ரோஹினி க்ரிஷ் பள்ளிக்கு சென்று அவனுக்கு TC வாங்கி வித்யா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கு வித்யாவிடம் 1 வாரம் மட்டும் பார்த்துக் கொள் நான் அவனை வேறு எங்காவது அனுப்புகிறேன் என கூறிவிட்டு செல்கிறார்.
புரொமோ
பின் நாளைய எபிசோட் புரொமோவில், முத்து க்ரிஷை அவனது அம்மா TC வாங்கி அழைத்து சென்றுவிட்டார் என தனது அப்பாவிடம் கூறுகிறார்.
ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் மீனா, க்ரிஷ் விஷயத்தில் ஏதோ மர்மம் உள்ளது, நமக்கு தெரிய கூடாது என யாரோ ஏதோ செய்கிறார்கள் என முத்துவிடம் கூறுகிறார்.