கடையில் ரூ. 3 லட்சம் தொலைந்த விவகாரம், மனோஜிற்கே திரும்பிய பிரச்சனை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
இன்றைய எபிசோடில் முத்த-மீனா, க்ரிஷ் வீட்டிற்கு செல்கிறார்கள்.
அங்கு வீட்டு ஓனர் ஒரே நாளில் திடீர் என வீட்டை காலி செய்துவிட்டார்கள் ஏன் என தெரியவில்லை என்கிறார்.
அந்த வீட்டு ஓனர் க்ரிஷ் மற்றும் அவரது அம்மா கிளம்பும் போது சிறுவன் பசிக்குது என கூறினான், பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் போனால் அவர்கள் இருப்பார்கள் என்றார்.
இதனால் முத்து மீனா ஹோட்டல் செல்ல அங்கிருந்து க்ரிஷ் மற்றும் ரோஹினி கிளம்பி இருக்கிறார்கள். வீட்டில் ஸ்ருதி தனது ரெஸ்டாரன்ட் இன்விடேஷனை அனைவருக்கும் கொடுக்கிறார்.
புரொமோ
நாளைய எபிசோட் புரொமோவில், மனோஜ் கடையில் வேலை செய்தவர்கள் ஒரு வக்கீலை அழைத்து வருகிறார்கள்.
அவர் வந்து நீங்கள் இந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டுள்ளீர்கள், அதற்கு ஆதாரம் இருக்கிறது என்கிறார்.
இதனை கேட்டதும் மனோஜ் பதறிப்போய் இங்கேயே பேசிக்கொள்ளலாம் என்கிறார். இதனால் அந்த வக்கீல் ரூ. 3 லட்சம் நஷ்டஈடாக கொடுங்கள் என்கிறார்.