வீட்டிற்கு வந்த சிந்தாமணியுடன் விஜயாவிற்கு ஏற்பட்ட பயங்கர மோதல், பதற்றத்தில் குடும்பம்... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது கொண்டாட்டமான கதைக்களம் தான் செல்கிறது.
அழுகையும், சண்டையும், பிரச்சனையுமாக முத்து-மீனா திருமணம் நடந்தது, அதேபோல் ரவி-ஸ்ருதி திருமணம் ஒரு பதற்றத்துடன் யாருக்கும் தெரியாமல் கோவிலில் நடந்தது.
தற்போது ரசிகர்கள் கொண்டாடும் இந்த இரண்டு ஜோடிக்கு பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் படு ஜாலியாக திருமணம் நடக்க உள்ளது.

அதற்கான கொண்டாட்டங்கள் கடந்த நேற்றில் இருந்தே எபிசோடில் காட்டப்பட்டு வருகிறது. இன்றைய எபிசோடில், ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என அனைவரும் இருக்க அதனை கெடுக்கும் வகையில் ஒருவர் என்ட்ரி கொடுக்கிறார்.
வேறுயாரு சிந்தாமணி தான், அவர் தனது மகள்-மருமகனுடன் விஜயா வீட்டிற்கு வருகிறார். சிந்தாமணியை தனது வீட்டில் பார்த்ததும் விஜயா செம கோபப்படுகிறார், மீனாவையும் அவளை ஏன் அழைத்தாய் என திட்டுகிறார். பின் எபிசோட் ஜாலி மூடில் செல்கிறது.

புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், ஸ்ருதி விஜயாவுடன் ஒருவர் நடனத்தில் போட்டிபோட இருக்கிறார் என கூறி சிந்தாமணியை காட்டுகிறார்.
சிந்தாமணி Vs விஜயா நடன போட்டி நடக்கிறது, இதில் யார் ஜெயிக்கப்போகிறார், அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.
