மீனா முகத்தில் தண்ணீர் ஊற்றிய விஜயா, கோபத்தில் அடிக்க கை ஓங்கிய முத்து... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
பெற்ற பிள்ளையை வெறுக்கும் ஒரு அம்மாவின் கதையாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. கடைசியாக வந்த கதைக்களத்தில் மனோஜிற்கு நாய் கடித்த காட்சிகள் காமெடியாக இருந்தது.
அடுத்து க்ரிஷ் பள்ளியில் படிக்க மாட்டேன், உன்னுடன் தான் இருப்பேன் என கூறி அடம்பிடிக்க ரோஹினி அவனை தாக்கி கஷ்டப்படுத்தினார்.
பின் அருண் பிரச்சனையில் சிக்கியபோது முத்து அவரை காப்பாற்ற ஆனால் அதை அப்படியே மாற்றி சீதாவிடம் முத்து மீது தப்பு என கூறிவிட்டார்.
புரொமோ
இன்றைய எபிசோடில், ரோஹினி-க்ரிஷ் காட்சிகள், சீதாவிடம் அருண் சொன்ன பொய் காட்சிகள் எல்லாம் இடம்பெற்றன. தற்போது நாளைய எபிசோடின் ஒரு பரபரப்பான புரொமோ தான் வெளியாகியுள்ளது.
அதாவது விஜயா சமையல் அறை சென்று சாப்பாடு இருக்கிறதா என பார்க்கும் போது மீனா எதுவும் சமைக்கவில்லை என கோபப்படுகிறார்.
இதனால் படுத்துக்கொண்டிருந்த மீனா மீது விஜயா தண்ணீர் கொட்டிவிடுகிறார், சமைக்காததற்கு கோபப்படுகிறார். அதைப்பார்த்த முத்து விஜயாவை கோபத்தில் அடிக்க செல்வது போல் கை ஓங்குகிறார்.

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
