மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது?
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா நடனப் பள்ளியால் பெரிய பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.
அவரது நடனப்பள்ளியில் ஒரு காதல் ஜோடி தவறு செய்துவிட இதனால் அந்த பெண் கர்ப்பமாக விடுகிறார். இந்த விஷயம் தெரிந்த தீபன்-ரதி வீட்டார் அண்ணாமலை வீட்டிற்கு வ்ந்து விஜயாவை மிரட்ட முத்து-மீனா துணையாக இருந்து பிரச்சனையை முடிக்கிறார்கள்.

ஆனால் இடையில் மனோஜ் நான் போய் பேசுகிறேன் என தீபன்-ரதி வீட்டாருக்கு பண ஆசையை காட்ட அவர்கள் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். விஜயா இந்த பணத்தை நீ நான் கொடுக்க வேண்டும் என ரோஹினியிடம் கூற அவர் சிட்டியிடம் சென்று உதவி கேட்க அது பெரிய பிரச்சனையாகிவிட்டது.
ரோஹினி போலீசாரால் கைது செய்யப்பட முத்து மீனாவாலேயே வீட்டிற்கும் வருகிறார்.

புரொமோ
அண்ணாமலை உன் நடனப் பள்ளியால் தான் இவ்வளவு பிரச்சனை, இனி நீ எந்த பள்ளியும் நடத்த வேண்டாம் என்கிறார்
முத்து, மீனா சொன்ன போதே அவர்களை கண்டித்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது, ரோஹினியை பணம் கொடுக்க சொல்லாமல் இருந்தால் இந்த ரவுடி பிரச்சனையும் இல்லை என விஜயாவை சரமாரி கேள்வி கேட்கிறார்.
அண்ணாமலை குடும்பத்தினரை கௌரவப்படுத்தும் வகையில் ஏதாவது செய் என கூற விஜயா டாக்டர் பட்டம் வாங்க முயற்சி செய்கிறார்.

நாளைய எபிசோட் புரொமோவில், விஜயா மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கி கொடுக்கிறார். அவரை செல்லம் என கொஞ்ச செய்கிறார். விஜயாவின் நடவடிக்கையை பார்த்து முத்து-மீனா இல்லை குடும்பத்தினரே ஷாக் ஆகியுள்ளனர்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri