சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா? இதோ பாருங்க
சிறகடிக்க ஆசை
தமிழக மக்களின் மனம் கவர்ந்த சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கோமதி பிரியா, வெற்றி வசந்த், சல்மா அருண், சுந்தர்ராஜன், அணிலா, ஸ்ரீதேவா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போதைய கதைகளம்படி சீதாவின் திருமணத்தால் முத்துவும் மீனாவும் பிரிந்து இருக்கிறார்கள். மீனா இல்லாததால் விஜயாவின் வீட்டில் பல கலாட்டாக்கள் நடைபெறுகிறது. சரி இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம் பற்றி உங்களுக்கு தெரியமா? அதில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதை பற்றி தற்போது பார்க்கலாம் வாங்க.
சம்பளம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு நாளைக்கு நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம். இதில் ஹீரோவாக நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் ஹீரோயின் நடிக்கும் கோமதி பிரியா இருவரும் ஒரு நாளைக்கு ரூ. 12000 சம்பளமாக வாங்கி வருகிறார்கள்.
ஹீரோவின் தாய், தந்தையாக நடிக்கும் அணிலா மற்றும் சுந்தர்ராஜன் இருவரும் ரூ. 8000 சம்பளமாக வாங்குகிறார்கள். ஸ்ரீதேவா மற்றும் சல்மா ரூ. 6000 சம்பளமும், ரவி மற்றும் ஸ்ருதி கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் ரூ. 5000 சம்பளமும் வாங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிப்பவர்கள்தான் அதிக சம்பளம் பெறுகிறார்கள்.