இந்த முறையாவது ரோஹினி சிக்குவாரா, அவர் அம்மா சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் தனக்கு கிடைத்த லாபம் பற்றியும், வீடு வாங்கும் யோசனை வைத்திருப்பது குறித்து வீட்டில் கூறி பெருமைப்படுகிறார்.
விஜயாவிற்கு தங்க வளையல் கொடுக்க அண்ணாமலைக்கு ஆடை வாங்கி கொடுக்கிறார். விஜயா தனது மகனிற்கு கிடைத்த லாபத்தால் வழக்கம் போல் குத்திக்காட்டி பேசுகிறார்.
பின் அண்ணாமலை வேலைக்கு கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் அவரை சந்தோஷமாக அனுப்புகிறார்கள்.
புரொமோ
நாளைய எபிசோட் புரொமோவில் ரோஹினி என் தலை எழுத்து யாரும் கண்டுபிடிக்க கூடாது என்று தான் இவ்வளவு தூரம் தள்ளி வந்து க்ரிஷை பள்ளியில் சேர்த்தேன்.
ஆனால் என் தலை எழுத்து மனோஜ் அப்பா அங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார் என கோபமாக கூறுகிறார். பின் ரோஹினி அம்மா எத்தனை நாளைக்கு உண்மையை மறைக்க முடியும், வீட்டில் கூறிவிடு என்கிறார்.
அதற்கு ரோஹினி என்னை பற்றிய உண்மை தெரிந்தால் மொத்தமாக வீட்டைவிட்டு வெளியே வந்துவிட வேண்டியது தான் என கோபமாக கூறுகிறார்.