வீடு வாங்கி ஏமாறப்போகும் மனோஜ், ரோஹினி, மீனாவிற்கு வந்த ஆபத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
ரசிகர்களின் பேராதரவோடு விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை.
இன்றைய எபிசோடில் மனோஜ் தாங்க வாங்க நினைக்கும் வீட்டை மனைவி ரோஹினியுடன் சென்று பார்க்கிறார். வீடு பிரம்மாண்டமாக சூப்பராக இருக்க வீட்டு உரிமையாளர் தற்போதைக்கு ரூ. 50 லட்சம் முதலில் பணம் தர கூறுகிறார்.
ஆனால் மனோஜ் ரூ. 30 லட்சம் என்று கூற அதற்குள் ஓகே கூறுகிறார்கள். ஆனால் ரூ. 30 லட்சத்தை கொடுத்து மனோஜ் ஏமாறப்போகிறார் என்பது தெரிகிறது.
இன்னொரு பக்கம் மீனாவிற்கு ஆர்டர் கிடைக்க அந்த ஆர்டர் முன்பு செய்த ஒருவர் வில்லங்கமான நபராக இருக்கிறார். இதனால் எதிர்காலத்தில் மீனாவிற்கு பிரச்சனை வரப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
புரொமோ
எபிசோட் முடிவில் புரொமோவில் விஜயா, தனது மகன் மனோஜ் பெரிய வீடு வாங்கப்போகிறார் என்பதை நினைத்து பெருமைப்பட்டு பார்வதியிடம் கூறி சந்தோஷப்படுகிறார்.