உண்மையை கூறிய மீனா, கோபத்தில் ரோஹினி கழுத்தை நெறித்த மனோஜ்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்
சிறகடிக்க ஆசை
மனோஜ் என்ற படித்த முட்டாள் செய்துள்ள காரியத்தால் தான் இப்போது கதையில் பரபரப்பான கதைக்களம் செல்கிறது. பெரிய ஆர்டர் கிடைத்த பெருமையில் ஆர்டர் முடிக்காமல் புதிய கடை திறப்பதற்கு ரூ. 30 லட்சம் கடன் வாங்கி தொழிலை தொடங்கியுள்ளார்.
ஆனால் பழைய ஆர்டர் கேன்சல் ஆக இப்போது வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் தவிக்க கடன் கொடுத்தவர் வீட்டிற்கு வருகிறார். அவர் யாராவது கையெழுத்து போட வேண்டும் என கேட்க அண்ணாமலை கையெழுத்து போடுகிறார்.

இதனால் முத்து மனோஜை அடிக்க செல்ல அவர் யாரும் என் கடனை அடைக்க வேண்டாம், சொத்தை பிரித்து கொடுங்கள் என கூற குடும்பமே ஷாக் ஆகிறார்கள்.

இன்றைய எபிசோட்
பண பிரச்சனையில் இருந்த மனோஜ் தனது அறைக்கு செல்ல அங்கு க்ரிஷ் அவரை அப்பா என அழைக்கிறார். கோபத்தில் மனோஜ் அவனை கீழே இழுத்து தள்ள அந்த ரோஹினி வந்து கேள்வி கேட்கிறார்.
கல்யாணி தான் என்ற கோபத்தில் மனோஜ் ரோஹினி கழுத்தை பிடித்து நெறுக்க பின் அவர் தள்ளிவிடுகிறார்.

இந்த சம்பவம் முடிய முத்து-மீனா-அண்ணாமலை நடந்த சம்பவம் குறித்து பேசுகிறார்கள். பின் நாளைய எபிசோட் புரொமோவில்,, மீனா முத்துவிடம் ரோஹினி பற்றிய உண்மையை சொல்லிவிட வேண்டும் என, க்ரிஷ் ரோஹினி மகன் தான் மீனா கூறுகிறார்.
ஆனால் அதை முத்து கேட்டாரா இல்லையா என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.