விஜயா மீது செம கோபத்தில் அண்ணாமலை, அடுத்த பிளான் போட்ட ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் டாப் தொடர்.
இந்த வார கதையில் க்ரிஷ் அம்மா இறந்துவிட்டார் என அவரது பாட்டி அண்ணாமலை வீட்டில் பேரனை விட்டுவிட்டு செல்கிறார். க்ரிஷ் தனது வீட்டில் இருப்பது விஜயாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை, எனவே சிந்தாமணி உதவியுடன் அவனை வீட்டைவிட்டு அனுப்ப பிளான் போட்டார்.

இந்த விஷயம் ரோஹினிக்கு தெரியவர மீனாவிடம் கூற அவர் முத்துவிடம் வேறு காரணம் சொல்லி க்ரிஷை பள்ளியில் இருந்து அழைத்து வர அனுப்புகிறார். பின் எப்படியோ போராடி கடத்தல் கும்பலிடம் இருந்து க்ரிஷை காப்பாற்றிய முத்து எல்லா விஷயத்தையும் அண்ணாமலையிடம் கூறுகிறார்.
விஜயா தான் காரணம் என தெரிந்துகொண்ட அண்ணாமலை அவரை அடிக்க சென்றுவிட்டார், போலீசிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்கிறார். கடைசியில் விஜயா மன்னிப்பு கேட்கிறார், பிரச்சனையும் முடிந்தது.

புரொமோ
மீனா, ரோஹினியிடம் உண்மை எப்போது கூறப்போகிறாய் என கோபமாக கேட்கிறார். இந்த பிரச்சனையில் அடுத்தக்கட்டமாக ரோஹினி, க்ரிஷை தனது பெட்டில் படுக்க வைக்கிறார்.

க்ரிஷை தனது பெட்டில் பார்த்த மனோஜ், விஜயாவிடம் கூற அவர் ரோஹினியை கேட்கிறார். ரோஹினி எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார், இந்த குட்டிச் சாத்தான் எல்லோரையும் இம்சை செய்கிறது என கோபமாக திட்டுகிறார்.