முத்து-மீனாவிற்கு ஷாக் கொடுத்த விஜயா, சிந்தாமணி அடுத்த பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், பாட்டி உடல்நிலை சரியில்லை என்பதால் அண்ணாமலை ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்த நேரத்தில் முத்து-மீனா வீட்டின் மாடியில் தங்களுக்காக ஒரு அறை கட்ட ஏற்பாடு செய்கிறார்கள். அண்ணாமலை இல்லை என்பதால் விஜயாவை மேஸ்திறியிடம் பணம் கொடுக்க கேட்க விஜயா வழக்கம் போல் முடியாது என கூறிவிடுகிறார்.
அந்த நேரத்தில் ஸ்ருதி விஜயாவிடம் சென்று இப்படியெல்லாம் செய்தால் யூடியூபில் போடலாம் என கூற பணம் கொடுக்க ஒப்புக் கொள்கிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், முதல் செங்கல் எடுத்து வைக்க அத்தை வர வேண்டும் என மீனா கேட்க முத்து என் அம்மா வரமாட்டாங்க என்கிறார். அந்த நேரத்தில் முத்து, ஸ்ருதியால் தான் அம்மாவை வர வைக்க முடியும் என கூற அவரும் அதையே செய்கிறார்.

யூடியூபில் வைரல் ஆக ஸ்ருதி சொன்னது போல் மாடிக்கு வந்து விஜயா எல்லா விஷயத்தையும் செய்கிறார். பின் விஜயா தொடங்க மிகவும் சிறப்பாக முத்து-மீனா வீட்டு வேலைகள் தொடங்குகிறது.
அடுத்து சிந்தாமணி போட்ட பிளான் போல் ரேகா அவரது அப்பாவிற்காக வீட்டிற்கு வருகிறார், சத்யாவை உன் அப்பாவுடன் இங்கே இரு என்கிறார். அடுத்து சிந்தாமணி என்ன பிளான் போடுவாரோ பொறுத்திருந்து காண்போம்.

காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் News Lankasri
ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் - பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! IBC Tamilnadu
சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும் News Lankasri