மீண்டும் குடும்பத்தை முட்டாளாக்கிய ரோஹினி, இன்னொரு பொய்யா?.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
வீட்டிற்கு வந்த ரோஹினி, விஜயாவிடம் அடி வாங்கிய பிறகு தன்னை பற்றிய உண்மையை குடும்பத்தினர் சொல்ல சொன்னதால் மீண்டும் மலேசியா என ஆரம்பிக்கிறார்.
நான் மலேசியா தான், என் அப்பா நன்றாக குடிப்பார், அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது, என் அம்மாவை இதுபற்றி கேட்டபோது அடித்துவிட்டார். எனது அம்மா, அப்பா செய்ததை நினைத்தே இறந்துவிட்டார், நான் யாருமே இல்லாமல் தனியாக நின்றேன்.
சென்னையில் வித்யாவை நம்பி தான் இங்கு வந்தேன், எனக்கு என்று யாருமே கிடையாது. நான் மனோஜ் மீது ஆசைப்பட்டு தான் இவ்வளவு பொய் சொன்னேன் என கூறுகிறார்.
புரொமோ
இந்த குடும்பத்திற்காக உண்மையாக இருப்பேன், என்னை பற்றி எந்த விஷயமும் இல்லை என கூறி சத்தியம் செய்கிறார். பின் தனது அறைக்கு செல்லும் ரோஹினி, முத்து-மீனாவை முறைத்துக்கொண்டே செல்கிறார்.
இனி கதையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.