சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவிற்கு பிறந்தநாள்- அவரே வெளியிட்ட கியூட் போட்டோ

Yathrika
in தொலைக்காட்சிReport this article
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சமீப காலங்களில் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்று வரும் ஒரு தொடர்.
முத்து, அம்மாவால் நிராகரிக்கப்படும் ஒரு மகன், தனது மனைவியால் புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அண்மையில் கதையில் முத்து, மீனாவிற்காக தாலி வாங்கிக்கொண்டு வர கோவிலில் புதிய திருமணமே செய்தார்கள்.
அந்த காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இன்றைய எபிசோட் கடைசியில் மனோஜ் வேலை செய்யும் உணவகத்திற்கு விஜயா செல்வது போல் காட்டப்படுகிறது, அவர் சிக்குவாரா இல்லை தப்பிப்பாரா என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.
கோமதி ப்ரியா
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மிகவும் பிரபலமான மீனா என்கிற கோமதி ப்ரியாவை இன்ஸ்டாவில் ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.
இந்த நிலையில் தான் கோமதி ப்ரியா தனது பிறந்தநாளை நேற்று, பிப்ரவரி 8 கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
முதல் வேலையாக கோவில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் என கூற ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.