நீதுவை செருப்பால் அடித்த விஜயா, சிந்தாமணி-ரோஹினி போட்ட புதுபிளான்.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை.
இப்போது கதையில் மனோஜ்-ரோஹினி விவாகரத்து பிரச்சனை முதலில் ஆரம்பிக்க அது இன்னும் முடியா கதையாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து ரவி-ஸ்ருதி-நீது பிரச்சனை அதுவும் எப்போது முடியும் என தெரியவில்லை.

இதற்கு இடையில் இந்த வார எபிசோட் புரொமோவில், சிந்தாமணி ஏற்பாடு செய்த சாமியார் வீட்டிற்கு வந்து பூஜை செய்து மீனாவால் உனது தாலிக்கு பிரச்சனை வரப்போகிறது என விஜயாவை பார்த்து கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
ஒரு பிரச்சனையை தீர்த்து அடுத்த பிரச்சனை வரும் என்று பார்த்தால் அடுத்தடுத்து கதையில் சிக்கலாகவே உள்ளது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், நீதுவிடம் மனோஜை திருமணம் செய்தால் உன் வாழ்க்கை நலமாக இருக்கும் என பேசுகிறார் விஜயா. ஆனால் அவரோ நான் ரவியை தான் காதலிக்கிறேன், வேண்டும் என்றால் ரவி-ஸ்ருதிக்கு விவாகரத்து வாங்கி கொடுத்துவிடுங்கள் என்கிறார்.
அதைக்கேட்ட விஜயா, நீதுவை செருப்பால் அடிக்கிறார், ஆனால் அது அவர் நினைத்து பார்ப்பது போன்ற காட்சியாக உள்ளது. நீது சொன்னதை கேட்டு விஜயா-சிந்தாமணி கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள்.

அடுத்த ரோஹினி ஏற்பாடு செய்த ஒரு நபர் மனோஜ் கடைக்கு வந்து அவருக்கு ஜோசியம் கூறுகிறார். உங்களது முதல் மனைவியை நீங்கள் விவாகரத்து செய்ய முடியாது, அவர் கழுத்தில் தான் நீங்கள் மீண்டும் தாலி கட்டுவீர்கள் என்கிறார்.
அதைக்கேட்ட மனோஜ் கோபம் அடைந்து அவரை வெளியே அனுப்புகிறார், வெளியே வந்த அவருக்கு ரோஹினி பணம் கொடுத்து அனுப்புகிறார்.

கடைசியாக எபிசோடில், சிந்தாமணி மகள் ரேகா சத்யாவுடன் சேர்ந்து மீனா கடைக்கு வருகிறார். தனது பள்ளிக்காக ஒரு ஆர்டர் மீனாவிடம் பேசுகிறார், அதைப்பார்த்து சிந்தாமணி ஷாக் ஆகிறார்.