விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
குடும்ப பாங்கான கதைக்களம் கொண்ட ஒரு தொடர் சிறகடிக்க ஆசை. நேற்றைய எபிசோடில் சிந்தாமணி ஏற்பாடு செய்த பெண் வீட்டிற்கு வந்து மீனா இங்கே இருந்தால் உங்களது தாலிக்கு ஆபத்து என கூறுகிறார்.
அதைக்கேட்டதும் செம ஷாக்கான விஜயா, மீனாவை வழக்கம் போல் திட்ட ஆரம்பிக்கிறார். ஆனால் அண்ணாமலை மற்றும் முத்துவிற்கு அவர் கூறியதை துளி கூட நம்பவில்லை.
அந்த நபரை முத்து வீட்டைவிட்டு விரட்டி அடித்தார்.

எபிசோட்
மீனாவை வெளியே சென்றே ஆக வேண்டும் என விஜயா பிரச்சனை செய்கிறார்.
ஆனால் அண்ணாமலை, முத்து அந்த பெண் சொன்னது பொய், இதையெல்லாம் நம்பாதே என எவ்வளவோ கூறுகிறார். விஜயா அவரது அறைக்கு வந்து நடந்த விஷயத்தை சிந்தாமணியிடமே கூறி அழுகிறார், அவரும் ஆமாம் அப்படி அவர் சொல்வது எல்லாம் உண்மை என்கிறார்.

பின் அறையில் இருக்கும் மனோஜிற்கு ரோஹினி போன் செய்கிறார். நாம் ஒன்றாக எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் என பழைய விஷயங்களை நினைவு கூறுகிறார்.

ஆனால் மனோஜ் கடைசியில் நீ எனக்கு துரோகம் செய்தவள் என கொஞ்சம் பேச ரோஹினி விவாகரத்து கொடுக்கிறேன் என கூறுகிறார். உடனே மனோஜ் சந்தோஷப்பட ரோஹினி இரு அதற்கு முன் நீ நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும்.
யாருக்கும் சொல்லாமல் வர வேண்டும், முக்கியமாக உன் அம்மாவிற்கு சொல்ல கூடாது, அப்படி வந்தால் விவாகரத்து கொடுக்கிறேன் என கூற மனோஜும் ஒப்புக்கொள்கிறார்.