ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், சிந்தாமணி, விஜயா ஜோதியகார பெண் சொன்னதை அதிகம் நம்ப வைக்க கோவிலில் ஒரு புது பிளான் போடுகிறார்.
கோவிலில் ஜோசியக்கார பெண் சொன்னது எல்லாம் அப்படியே நடக்கிறது என எல்லோரும் கூற விஜயாவும் மிகவும் பயப்படுகிறார். அதேசமயம், மீனாவும் மனம் தாங்காமல் ஒருவரிடம் ஜாதகம் காட்டி பரிகாரம் கேட்கிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், விஜயா பார்வதியை சந்தித்து அண்ணாமலையிடம் மீனாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப பேச சொல்கிறார்.

ஆனால் பார்வதி கண்டிப்பாக நான் அப்படி செய்ய மாட்டேன், அது மூடநம்பிக்கை என கூறுகிறார். வீட்டிற்கு வந்த விஜயா மீனா செய்த காரியத்தை கண்டு ஷாக் ஆகிறார்.
அதாவது மீனாவிற்கு ஒருவர் சொன்னது போல் வீடு முழுக்க விளக்கு ஏற்றி பரிகாரம் செய்கிறார், அதைப்பார்த்து விஜயாவும் ஷாக் ஆகிறார். அண்ணாமலையிடம் மீனாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்புங்கள் என கூற அவரும் சரி அவளை வெளியே அனுப்புகிறேன்.

ஆனால் மருமகளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய பாவம் எனக்கு வேண்டாம், நானும் அவருடன் வெளியே செல்கிறேன் என்கிறார்.
அடுத்த நாள் மனோஜ், ரோஹினி சொன்னது போல் ஒரு ஹோட்டல் செல்கிறார். அங்கு மனோஜை தற்கொலை செய்துகொள்வேன் என செமயாக ரோஹினி லாக் செய்ய அவர் பாத்ரூம் சென்று என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்.

அங்கேயே தனது அம்மாவிற்கு போன் செய்து விஷயத்தை கூறுகிறார், அடுத்து என்ன நடக்குமோ நாளைய எபிசோடில் காண்போம்.
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan