ரோஹினி கொடுத்த பத்திரத்தில் கையெழுத்து போட போன மனோஜ், எப்படி தப்பித்தார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கியமான கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒருபக்கம் ரோஹினி, மனோஜிற்கு விவாகரத்த கொடுக்காமல் வழக்கை இழுத்தடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, விஜயாவிடம் நட்பு பழகி அவரிடம் இருந்து வீட்டை எழுதி வாங்க பிளான் போட்டுவிட்டார்.

இன்னொரு பக்கம் தனது தொழிலில் பிரச்சனை செய்யும் மீனாவை அவரது வீட்டைவிட்டு அனுப்ப சாமியாரை வைத்து செமயான பிளானை போட்டுவிட்டார். சிந்தாமணியின் நிஜ முகம் எப்போது குடும்பத்தினருக்கு தெரியவரும், ரோஹினி-மனோஜ் விவாகரத்து பிரச்சனை எப்படி முடியும் என தெரியவில்லை.
இதற்கு இடையில் ரவி-ஸ்ருதி பிரச்சனை இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி சிந்தாமணி மகள் ரேகா-சத்யா காதல் வேறு புதியதாக தொடங்கியுள்ளது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், மனோஜ் ரோஹினியை நம்பி அவர் சொன்ன ஹோட்டலிற்கு சென்று வசமாக சிக்கிக் கொள்கிறார்.
மனோஜ் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு என கொடுக்க ரோஹினி அவர் விவாகரத்து வேண்டாம் என்ற பத்திரத்தில் நீ கையெழுத்து போடு இல்லையெனில் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்.

இதில் பயந்த மனோஜ், பாத்ரூம் சென்று தனது அம்மாவிற்கு போன் செய்து விஷயத்தை கூற எல்லோரும் கோபப்படுகிறார்கள். பின் முத்து-மீனா செம பிளானுடன் ஹோட்டலுக்கு வருகிறார்கள்.
அதாவது மனோஜ் கையெழுத்து போடுவது தான் கடைசி வழி என ரெடியாக உடனே வெளியே ஒரு குரல் கேட்கிறது. அது வேறுயாரும் இல்லை, ரோஹினி மகன் க்ரிஷ் தான், மகனின் குரல் கேட்டதும் அவன் ஏன் இங்கே வந்தான் என ஷாக் ஆகி ரோஹினி கதவை திறக்க மனோஜ் எப்படியோ தப்பிக்கிறார்.

வீட்டிற்கு மனோஜ் வர உடனே விஜயா, வீட்டில் எல்லாம் தப்பாகவே நடக்கிறது எல்லாம் இவளால் தான் என வழக்கம் போல் விஜயா, மீனாவை குற்றம் கூறுகிறார்.