சிட்டியும், ரோஹினியும் சேர்ந்து போடும் அடுத்த திட்டம், இந்தமுறை சிக்கப்போவது யார்?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பதற்றத்தில் இருந்த குடும்பத்தினருக்கு சந்தோஷம் கிடைத்துள்ளது.
அதாவது முதல் திருமண நாளை கொண்டாட ரவி நிகழ்ச்சி ஏற்பாட செய்ய திடீரென ஸ்ருதியை காணவில்லை. எப்படியோ முத்து-மீனா அவரை கண்டுபிடித்து நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துவிட்டனர்.
கேக் வெட்டி கொண்டாடிய பிறகு ஸ்ருதி-ரவி இருவரும் அனைவரையும் பற்றி பேசி எல்லோரையும் சந்தோஷப்படுத்திவிட்டனர்.
புரொமோ
நிகழ்ச்சி முடிந்து வந்த நாளைய புரொமோவில் மீண்டும் சத்யாவிற்கு பிரச்சனை வரும் தெரிகிறது.
ரோஹினி, வித்யா, சிட்டியை சந்தித்து வீடியோ வெளியிட்டது நீங்கள் என்ற சந்தேகம் முத்துவிற்கு வந்துவிட்டது என கூறுகிறார்.
சிட்டியும், அவனுக்கு இருக்கும் ஒரே எதிரி நான் தான், அப்போது சந்தேகம் இருக்கும் என கூற, அதற்கு சிட்டியிடம் வேலை செய்யும் ஒருவர், சத்யா ஒருநாள் உன்னைப்பற்றி கேட்டான் என்கிறார்.
உடனே சிட்டி, ஒரு பிரச்சனையில் சத்யா சிக்க வேண்டியது, நான் தான் பாவம் பார்த்துவிட்டேன். அந்த வழக்கில் சத்யா சிக்கினால் கண்டிப்பாக வெளியே வர முடியாது என்கிறார்.
இவர் பேசியதை வைத்து பார்க்கும் அடுத்து சத்யாவிற்கு பிரச்சனை வரும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.