சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் கதைக்களம் ஒரே பிரச்சனையாக சுற்றி சுற்றி இருக்கிறது.
முதலில் ரோஹினி பற்றிய உண்மை அண்ணாமலை குடும்பத்தினருக்கு தெரிய வர அவரை வீட்டைவிட்டு அனுப்பி விவாகரத்து வாங்க முடிவு செய்தார் விஜயா. அதற்கான வேலைகளில் அவர் இருக்க ரோஹினியோ சில பிளான் போட்டு மனோஜ் வாயாலயே ஆதாரத்தை திரட்டி வருகிறார்.

இன்னொரு பக்கம் ஸ்ருதி-ரவி, நீது பிரச்சனை செல்கிறது, அதில் தேவையில்லாமல் முத்து பெயர் அடிபட எப்படியோ உண்மையும் வெளிவந்துவிட்டது.
இந்த பிரச்சனை செல்வம்-முத்துவிற்கு பிரச்சனை வர அருண் அம்மா மீது செல்வம் கார் ஏற்ற அவரும் இறந்துவிட்டார். முத்து சொல்லி தான் செல்வம் எனது அம்மா மீது காரை ஏற்றியிருப்பார் என அருண் பழி போட்டு வருகிறார்.

இன்றைய எபிசோட்
அம்மா வீட்டிற்கு வந்த மீனா, சீதாவிடம் என்ன நடந்தது என கேட்கிறார். அவர் அருணிடம், மாமாவிற்காக பேசியபோது பிரச்சனை ஏற்பட அவர் அடித்துவிட்டதாக சீதா மீனாவிடம் கூறுகிறார். மேலும் சீதா இந்த விஷயத்தை மாமாவிடம் கூற வேண்டாம், தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்கிறார்.

மீனாவும் அவரிடம் சொன்னால் என்ன நடக்கும் என எனக்கு தெரியும், சொல்ல மாட்டேன் என்கிறார். பின் மனம் தாங்காமல் மீனா அருண் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு அவரிடம், என் தங்கச்சி உங்களை நம்பிதான வந்தா, எங்களையெல்லாம் மீறி நீங்கள் தான் வேணும் என்று வந்தாள், நீங்க அவளையே இப்படி போட்டு அடிச்சீங்கனா என்ன அர்த்தம் என கேட்கிறார். ஆனால் அருண் முத்து மீது பழி போடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.