வழக்கம் போல மீனா மீது செம கோபத்தை காட்டிய விஜயா, ஆனால் இந்த பிரச்சனை வேறு.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட் எந்த ஒரு பரபரப்பும் அமையாமல் இருந்தது.
மீனா தனது அம்மாவை சந்திக்க கோவில் செல்ல அங்கு வந்த சத்யாவால் ஒரு சந்தோஷ விஷயம் அவருக்கு நடக்கிறது. அதாவது சத்யா ஒரு மண்டபம் முழுவதும் அலங்காரம் செய்ய மீனாவிற்கு ஆர்டர் கிடைக்கிறது.
அந்த சந்தோஷத்தில் வீட்டிற்கு வந்த மீனா, முத்துவிடம் இந்த விஷயத்தை கூறி சந்தோஷப்படுகிறார். பின் அட்வான்ஸ் குறைவாக வாங்கியிருப்பதாகவும், ஒரு 50 ஆயிரம் தேவைப்படுவதாக மீனா முத்துவிடம் கூறுகிறார்.
பின் மீனா பணத்திற்கு ரவி-ஸ்ருதியிடம் கேட்கலாமா என கூற முத்து முதலில் மறுக்கிறார், கடைசியில் வாங்க முடிவு செய்கிறார்.
புரொமோ
இன்று சாதாரணமாக சென்ற சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை ஒரு சண்டை நடக்க இருக்கிறது.
அதாவது மீனாவை நேரடியாக வீழ்த்த முடியாத ரமணியம்மா தற்போது விஜயாவை நாடியுள்ளார். அவரிடம், என் மாமியார் நான் பூ கட்டுவதால் என்னை மதிப்பது இல்லை, அவரின் திமிரை அடக்கவே நான் வேலைக்கு செல்கிறேன் என்று மீனா கூறியது போல் விஜயாவிடம் கூறுகிறார்.
இதனால் ஆத்திரப்பட்ட விஜயா வீட்டிற்கு வந்த என்ன விஷயம் என்று சொல்லாமல் மீனாவை திட்டுகிறார். இதனால் என்ன நடந்தது என்பதை முதலில் கூறு என அண்ணாமலை கேட்கிறார்.