சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா?
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, அட சீரியல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என மக்கள் கொண்டாடும் அளவிற்கு மிகவும் சூப்பரான கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தாலி பிரித்து கோர்த்த நிகழ்ச்சியில் நடந்த பிரச்சனையால் ஸ்ருதி வீட்டிற்கு வராமல் இருப்பதால் விஜயா வெறுப்பின் உச்சத்தில் உள்ளார்.
இன்றைய எபிசோடில் ரோஹினி சொன்னது போல் வீட்டைவைத்து பணம் வேண்டும் என மனோஜ் கேட்க விஜயா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அவரை திட்டி தீர்த்துள்ளார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.
முதல் சாய்ஸ்
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து ஒரு தகவல் ஒன்று வலம் வருகிறது. முத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி வசந்திற்கு இந்த சீரியல் மூலம் பெரிய ரீச் கிடைத்துள்ளது.
ஆனால் முத்து கதாபாத்திரத்தில் நடிக்க வெற்றி வசந்த் முதல் சாய்ஸ் கிடையாதாம்.
இதயத்தை திருடாதே, இப்போது விஜய் டிவியில் சின்ன மருமகள் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் நவீன் தான் முதல் சாய்ஸ். அவர் சில காரணங்களால் சிறகடிக்க ஆசை சீரியல் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
You May Like This Video