குடும்ப குத்துவிளக்கு சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மீனாவா இது?.. High Heels, செம மாடர்ன் உடை என கலக்குறாரே..
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, பூ கட்டும் குடும்பத்தை நேசிக்கும் பெண்ணுக்கும், குடும்பம் பிடித்தாலும் குடித்துவிட்டு சுற்றும் நாயகனுக்கும் கனெக்ஷன் வைத்து உருவாக்கப்பட்ட சீரியல் இது.
இப்போதும் அவர்களை முன்னிலைப்படுத்தியே கதையின் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இப்போது ரோஹினியின் பொய்களில் ஒரு பொய் வெளியாக விஜயா பூகம்பமாக வெடித்துள்ளார்.
அடுத்த வார கதைக்களத்தில் சத்யா-சிட்டி பிரச்சனை காட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகை கோமதி
இந்த தொடரில் மீனாவாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கோமதி. இதற்கு முன் சில சீரியல்கள் இவர் நடித்தாலும் பெரிய ரீச் கொடுத்தது இந்த தொடர் தான்.
சமீபத்தில் மலேசியா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார். தற்போது அவர் கருப்பு நிற மாடர்ன் உடையில் High Heels அணிந்து வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
அதோடு சிலர் நம்ம மீனாவா இது என்றும் இதை பார்த்து விஜயா ஒன்றும் சொல்லவில்லையா என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சொந்த நாட்டு வீரரை தோற்கடித்த ரஷ்யர்: "துரோகி" எனக் கூறி பதக்கம் கொடுத்த நிர்வாகி..சர்ச்சை வீடியோ News Lankasri
