உண்மையை வீட்டில் கூறிய முத்து, ஷாக்கான விஜயா, ஆனால் ரோஹினி வைத்த டுவிஸ்ட்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
சீரியலில் முக்கிய வில்லியாக ரசிகர்களால் பார்க்கப்படும் ரோஹினி பற்றிய முழு உண்மை எப்போது குடும்பத்தினருக்கு தெரியவரும் என அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நாளும் வந்தது, ஆனால் மீனாவிற்கு உண்மை தெரியவர பிரச்சனை வெடிக்காமல் போனது.

எபிசோட்
தற்போது ரோஹினி ஏற்கெனவே திருமணம் ஆனவர், அவரது மகன் தான் க்ரிஷ் என்பது முத்துவிற்கு நேற்றைய எபிசோடில் தெரிந்துவிட்டது.
இன்றைய எபிசோடில், வீட்டில் மனோஜ், ரோஹினி பற்றிய மொத்த உண்மையையும் கூறுகிறார், இதனால் மொத்த குடும்பமே செம ஷாக் ஆகிறார்கள். சிறுவயதிலேயே எனது அம்மா-அப்பா, அக்காவை தத்துகொடுத்துவிட்டார்கள் என்கிறார்.

உடனே ரோஹினி சட்டென க்ரிஷ் கல்யாணி குழந்தை தான் ஆனால் என் குழந்தை இல்லை. க்ரிஷ் எனது அக்காவின் குழந்தை, நானும் அவளும் டுவின்ஸ் என கூறுகிறார். ஆனால் கடைசியில் அதெல்லாம் முத்து காணும் கனவாக காட்டப்படுகிறது.
அடுத்து வீட்டிற்கு வரும் மனோஜ் லண்டனில் ஒரு தம்பதி குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறார்கள். க்ரிஷை தத்துகொடுக்கலாம் என நான் முடிவு செய்துள்ளேன். குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தவர்கள் ரூ. 25 லட்சமும் தருவதாக கூறியுள்ளார்களாம்.

க்ரிஷை தத்துகொடுத்தால் எனக்கு ரூ. 25 லட்சம் வரும் நான் எனது கடனை எல்லாம் அடைப்பேன் என கூறகிறார். மனோஜ் இதுகுறித்து பேசிக்கொண்டிருக்கும் போதே முத்து வீட்டிற்கு வந்து கதவு, ஜன்னல் எல்லாம் மூடிவிட்டு 2 வருட ரகசியத்தை சொல்ல போகிறேன் என்கிறார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri