ரோஹினி வாயாலேயே க்ரிஷ் தனது மகன் என சொல்ல வைத்த முத்து..சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்
சிறகடிக்க ஆசை
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சில புதிய முகங்களுடன் தொடங்கப்பட்ட சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
எஸ்.குமரன் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 850 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தொடர் ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் தொடங்கப்பட்ட ஒரு ரகசியம் இப்போது தான் வெளியாகியுள்ளது.
இந்த நேரத்தில் ரகசியம் வெளியாகும் என ரசிகர்கள் சுத்தமாக எதிர்ப்பார்க்கவே இல்லை.
முதலில் மீனாவிற்கு உண்மை தெரியவரும் போதே பெரியதாக வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் ரோஹினி அவரை எப்படியோ சமாளித்துவிட்டார்.

எபிசோட்
ஆனால் முத்துவிற்கு மீனா சொல்லாமல் ரோஹினி என்கிற கல்யாணி பற்றிய உண்மை வெளியாகும் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.
இன்றைய எபிசோடில், வீட்டில் அனைவரிடமும் முத்து, க்ரிஷை மனோஜ் சொன்னது போல் தத்துகொடுத்து விடலாம், அங்கே ஜாலியாக இருப்பான். இங்கு தான் அவனுக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை என கூறினார்.

அப்படியே சில விஷயங்கள் பேசியவர் க்ரிஷ் அம்மா பற்றிய முழு உண்மையும் தெரிந்தது. அவருக்கு க்ரிஷ் இல்லாதது சரி தான், ஏன் என்றால் அந்த பெண் சரியானவர் இல்லை. புருஷன் இறந்த பிறகு வயிற்றுப் பிழைப்பிற்காக தவறான விஷயம் செய்கிறார் என கூற ரோஹினி செம கோபம் அடைகிறார்.
ஒரு பெண் பற்றி நீங்கள் எப்படி இதுபோல் கூறலாம் நேராக பார்த்தீர்களா என கேட்க முத்துவும் எனது காரில் சவாரி வந்தவருடன் தான் க்ரிஷ் அம்மா சென்றார் என்கிறார். இதனால் கோபமான ரோஹினி நீ சொல்வது எல்லாம் பொய் பொய் பொய் என கூற முத்து நான் சொல்வது அத்தனையும் உண்மை என்கிறார்.

இதனால் கோபத்தில் ரோஹினி, க்ரிஷ் எனது மகன், நான் பெற்ற பிள்ளை, நான் சுமந்த மகன் என கூற குடும்பமே செம ஷாக்.
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri