அடி அடியென செம அடி வாங்கிய ரோஹினி, யார் அடித்தது தெரியுமா?... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
சிறகடிக்க ஆசை
ரோஹினி திருமணம் ஆனவர் அவரது மகன் தான் க்ரிஷ் என தெரிந்ததுமே மொத்த அண்ணாமலை குடும்பமும் செம ஷாக் ஆனார்கள்.
அந்த சோகத்தில் இருந்தே இன்னும் யாரும் வெளியே வரவில்லை, அதற்குள் வித்யா வீட்டிற்கு வந்து ரோஹினி செய்த மற்ற விஷயங்களை கூற அனைவரும் செம ஷாக்.
எப்போதும் பொறுமையாக யோசிக்கும் அண்ணாமலை ரோஹினி பற்றிய அனைத்து விஷயங்களையும் கேட்டவுடன் இனி ரோஹினி இந்த வீட்டு மருமகள் கிடையாது, சீக்கிரம் விவாகரத்து வாங்க வேண்டும் என்றார்.

இன்றைய எபிசோட்
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவை கொலை செய்ய ரோஹினி போட்ட திட்டம் மீனா அம்மாவிற்கும் அவருடன் வேலை செய்துவந்த மற்ற பெண்களுக்கும் தெரிய வருகிறது.

இதனால் கோபத்தில் அவர்கள் சத்யாவின் உதவியுடன் ரோஹினியை வர வைத்து வண்டியில் ஏற்றி அடி அடியென செம அடி கொடுத்துள்ளனர். அந்த விஷயம் தெரிந்து முத்து-மீனா வந்து ரோஹினி பார்க்க அவர் மேலும் இவர்கள் மீது செம கோபத்துடன் செல்கிறார்.

அடி வாங்கிய கோலத்தில் மனோஜை ஷோரூமில் சென்று பார்த்து அவரை கட்டியணைத்து அழுகிறார். ஆனால் அவரோ நீ இங்கிருந்து செல்லவில்லை என்றால் கண்டிப்பாக நானே உண்மை அடித்துவிடுவேன், வெளியே போ என்கிறார்.
இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட், கொஞ்சம் சீரியஸாகவே சென்றுள்ளது.