அடங்காத ரோஹினி, மனோஜுடன் சேர போட்ட மாஸ் பிளான், அதுவும் பொய்... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
அட இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து விஜய் டிவி சீரியல்களின் கதைக்களம் மிகவும் விறுவிறுப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.
சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, சின்ன மருமகள், அன்புடன் கண்மணி போன்ற தொடர்களில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம் அமைந்து வருகிறது.
இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ்-ரோஹினி ஜோடி பிரச்சனை ஏற்கெனவே பரபரப்பாக செல்ல இப்போது நீதுவால், ரவி-ஸ்ருதியின் வாழ்க்கையும் பிரச்சனையாகியுள்ளது.

நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல்
எபிசோட்
ஸ்ருதி சொன்ன கண்டிஷன்களை மீனா வீட்டில் கூற அண்ணாமலை விஜயாவிடம் பேச கூறுகிறார்.
விஜயாவும் ஸ்ருதியிடம் போன் போட்டு பேச அவரோ ஆரம்பத்தில் சொன்னது போல் நீது என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், ரவியை காதலிக்கவில்லை என நீது வீடியோ வெளியிட வேண்டும் என கூறி போனை கட் செய்கிறார்.

பின் ரவி-முத்து-மனோஜ் 3 பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள், அப்போது மனோஜ் ஐடியா கூறுவதாக கூறி நன்றாக வாங்கி கட்டிக்கொள்கிறார்.
இன்னொரு பக்கம் ரோஹினி, மனோஜுடன் சேர அடுத்த நாடகத்தை ஆரம்பிக்கிறார்.

அந்த ஆர்டர் கேன்சல் செய்த மேனேஜரை சந்தித்து ரோஹினி, நான் தான் இந்த ஆர்டரை வாங்கி கொடுத்தேன், இப்போது கேன்சல் ஆனதால் என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார், விவாகரத்து வரை சென்றுவிட்டார் என அடுத்த நாடகத்தை பொய்யாக போடுகிறார்.
ரோஹினி போட்ட நடிப்பை பார்த்து அந்த மேனேஜரும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.