கையில் காயத்துடன் அம்மா வீட்டிற்கு வந்த சீதா, பதறிய மீனா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
சிறகடிக்க ஆசை
அடுத்து என்ன அடுத்து என்ன கேட்க வைக்கும் வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் கதைக்களம் அமைந்து வருகிறது.
இதுவரை ஒளிபரப்பான எபிசோடில், ரோஹினி உண்மை தெரிந்ததும் கொஞ்ச நாள் வருத்தப்பட்டார், இப்போது எப்படியாவது மனோஜை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என இல்லாத பிளான் எல்லாம் போடுகிறார்.
இன்னொரு பக்கம் ரவி, நீதுவின் இந்த நிலைமைக்கு முத்து காரணம் இல்லை என தெரிந்ததும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார்.

சீதா காயம்
ரோஹினி மனோஜ், ரவி ஸ்ருதி பிரச்சனைக்கு இடையில் செல்வம் ஓட்டிய காரால் அருணின் அம்மா அடிபட்டு சம்பள இடத்திலேயே உயிரிழக்கிறார். தனது அம்மாவின் உயிரை எடுத்தது முத்து தான், அவன் கூறி தான் அவனது நண்பன் எனது அம்மாவை கொன்றான் என பழி போடுகிறார் அருண்.

வீட்டிற்கு வந்த முத்து-மீனாவை தெருவிலேயே நிற்க வைத்து மோசமாக பேசி அனுப்புகிறார். அந்த வருத்தத்தில் சீதா அருணிடம் ஏதாவது பேசியிருப்பார் போல் தெரிகிறது. கையில் காயத்துடன் தனது அம்மா வீட்டிற்கு சீதா வருகிறார்.
அவர் முகம் எல்லாம் வீங்கி கையில் காயத்துடன் சீதாவை பார்த்த மீனா பதறுகிறார், என்ன ஆனது என கேட்கிறார். நாளைய என்ன நடந்தது என சீதா கூறுவாரா என்ன பிரச்சனை என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.