ரோஹினி பற்றிய உண்மை தெரிந்ததும் விஜயா இல்லை, மனோஜ் செய்த ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்
சிறகடிக்க ஆசை
கதையில் 2 வருடங்களாக ஒரு ரகசியத்தை மறைக்க அடுத்தடுத்த பொய் பொய் என கூறிக்கொண்டு தப்பித்துக்கொண்டே வந்தவர் தான் ரோஹினி.
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது அவர் காத்து காத்து வைத்திருந்த உண்மை வெளிவந்துவிட்டது.
முதலில் மீனாவிற்கு தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்றபோது உண்மை வெளியானது, அந்த கதைக்களத்தையே மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை. சரி அவர் எல்லோரிடத்திலும் கூறுவார் என பார்த்தால் ரோஹினி நான் என் மகனுடன் இறந்து விடுவேன் என கூற அமைதியாகிவிட்டார்.

இப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரோஹினி முதல் கணவர் உறவினர் மூலம் முத்துவிற்கு எல்லா விஷயமும் தெரிய வந்துவிட்டது. அதே கோபத்துடன் வீட்டிற்கு வந்தவர் குடும்பத்தினர் அனைவரின் முன்பும் உண்மையை ரோஹினி வாயாலயே வர வைக்கிறார்.
ரோஹினி க்ரிஷ் என் மகன் என்று கூறியதும் அனைவருமே செம ஷாக்.

எபிசோட்
தற்போது இன்றைய எபிசோடில், வழக்கம் போல் ரோஹினி எல்லோரிடமும் கதறி கதறி அழுது மன்னிப்பு கேட்கிறார்.
ரூ. 18 லட்சம் பணம் எடுத்து கிளம்பிய கானா வினோத் 95 நாட்கள் பிக்பாஸில் வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா?
விஜயா கோபத்தில் ரோஹினியை அடிப்பதும் திட்டுவதுமாக உள்ளார். பின் ரோஹினி மனோஜிடம் மன்னிப்பு கேட்க அவர் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் தனது மனைவியை அடித்துவிடுகிறார்.

ரோஹினி கழுத்தில் இருந்து தாலியை விஜயா கழட்ட சொல்ல மனோஜ் அவள் சம்பந்தமான எந்த பொருளும் எனக்கு வேண்டாம் என்கிறார்.
பின் ரோஹினியை கழுத்தை பிடித்து வெளியே துரத்திவிடுகிறார். கடைசியில் ரோஹினி, மீனாவிற்கும் இந்த உண்மை தெரியும் என போட்டுடைத்துவிட்டு செல்கிறார்.

இதனால் மொத்த குடும்பமும் ஏன் உண்மையை மறைத்தாய், அண்ணாமலையிடம் கூட உண்மையை சொல்லவில்லை என எல்லோரும் திட்டுகிறார்கள்.