மனோஜிற்காக பிரச்சனையில் சிக்கிய விஜயா, ஷாக்கில் அண்ணாமலை... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரோஹினி பற்றிய உண்மை அண்ணாமலை குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
இதனால் கோபமான விஜயா, ரோஹினியை அடித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். ரோஹினி தோழிகளின் உதவி கிடைக்காததால் கடைசியில் சிந்தாமணியிடம் செல்ல அவர் ஒரு பிளானில் அவரை தங்க வைக்கிறார்.

சிந்தாமணி ரோஹினியை வைத்து விஜயாவின் வீட்டை எழுதி வாங்க முடிவு செய்கிறார்.
இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ், ரோஹினி செய்த துரோகத்தை மறக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார், அவரைப் பார்த்த சோகத்தில் தனது மகன் வாழ்க்கை சரி செய்ய வேண்டும் வேறு திருமணம் செய்துவைக்க வேண்டும் என விஜயா முடிவு எடுக்கிறார்.

எபிசோட்
இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில், பாட்டியிடம் விஜயா அனைத்து விஷயங்களையும் கூற அவர் வீட்டிற்கு வருகிறார்.
விஜயா வீட்டிற்கு வந்தவரிடம் நீங்கள் தான் குடும்பத்திற்கு பெரியவர், நான் எனது மகனுக்கு இன்னொரு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளேன் என கூற மனோஜும் அம்மா சொல்வது என்னவோ அது எனக்கும் சம்மதம் என்கிறார்.

பின் அண்ணாமலை குடும்பத்திற்கு ஷாக் கொடுக்கும் வகையில் மனோஜிற்கு கடன் கொடுத்த பைனான்சியர் வருகிறார். அவர் மனோஜை நம்பி நான் கையெழுத்து வாங்கவில்லை, அவர் வெறும் ஜீரோ, ரோஹினியை நம்பி தான் இருந்தேன்.

இப்போது இருவரும் பிரிந்துவிட்டார்கள், எனது பணத்திற்கு யார் பொறுப்பு என்கிறார். மனோஜை பைனான்சியர் கேவலமாக பேசியதால் செம கோபப்பட்ட விஜயா என் மகன் கண்டிப்பாக தருவான், அவர் தரவில்லை என்றால் நான் தருகிறேன் என கூறி பைனான்சியரிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.