ரோஹினி செய்த Fraud வேலைகளை மொத்தமாக கூறிய வித்யா, அண்ணாமலை எடுத்த முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ரோஹினி 2 வருடங்களாக மறைத்து வைத்த உண்மை முத்து மூலமாக அண்ணாமலை குடும்பத்தினருக்கு தெரிய வந்துவிட்டது.
ரோஹினியை வெளியே அனுப்பிய விஜயா, தனது மகனுக்கு மறுமணம் செய்து வைக்கும் முடிவில் உள்ளார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, ரோஹினியை கைக்குள் போட்டுக் கொண்டு விஜயா வீட்டை கைப்பற்ற முடிவு செய்கிறார்.

இன்றைய எபிசோட்
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜிற்கு பணம் கொடுத்த பைனான்சியர் எப்படியோ விஜயா கோபத்தை தூண்டி அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்.
ஆனால் வீட்டில் இருப்பவர்கள் விஜயா செய்தது தவறு என கூறுகிறார்கள், அவரோ ஒன்றும் ஆகாது நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

முத்து பைனான்சியரை சந்தேகப்பட்டது போல் அவர் சிந்தாமணி சொல்லித்தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்று இன்றைய எபிசோடில் தெரிகிறது. சத்யா பைனான்ஸ் கம்பெனிக்கு அவருக்கு தெரிந்தவர் பணத்திற்காக வருகிறார்.
அவர் சிட்டியுடன் முன்பு இருந்தவராம், ஆனால் இப்போது இல்லை. புதிய தொழில் தொடங்க பண விஷயமாக சத்யாவிடம் பேசியவர் சிட்டி-ரோஹினி இணைந்து தான் முத்து காரின் பிரேக் கட் செய்த பிளான் போட்டார்கள் என்ற உண்மையை கூறுகிறார்.

அதைக்கேட்ட முத்து நேராக வீட்டிற்கு வந்து இந்த உண்மையை கூறுகிறார், மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறார்கள். அந்த ஷாக் குறைவதற்குள் வித்யா தனது கணவருடன் அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார்.
வந்தவர் ரோஹினி செய்த எல்லா Fraud வேலையையும் கூறுகிறார்.
சத்யா திருடிய வீடியோவிற்காக முத்து போனை எடுத்தது, பார்வதி வீட்டில் பணம் திருடியது, மனோஜ் கடையிலேயே பணம் எடுத்தது, வீட்டின் முன் இருந்த மீனா கடையை தூக்கியது, மீனா அம்மா கடையை தூக்கியது என எல்லா விஷயத்தையும் கூறுகிறார்.

இதையெல்லாம் கேட்ட மொத்த குடும்பமும் செம ஷாக் ஆகிறார்கள், இப்படியும் பெண் இருப்பாரா என புலம்புகிறார்கள். முத்து, விஜயா, மனோஜ் என அனைவரும் ரோஹினி மீது புகார் கொடுக்கலாம் என கிளம்ப அண்ணாமலை வேண்டாம் என்கிறார்.
ஆனால் இனி ரோஹினி இந்த வீட்டின் மருமகள் கிடையாது, விவாகரத்து வாங்கும் வேலையை வேகமாக செய்ய வேண்டும் என்கிறார்.