ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியலாக உள்ளது சிறகடிக்க ஆசை.
இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியுள்ளது, சீரியல் குழுவினரும் நடனம் ஆடி இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள், அந்த வீடியோக்கள் எல்லாம் வைரலானது.
சீரியல் தொடங்கி 3 வருடங்களாக மறைக்கப்பட்ட ஒரு உண்மை இப்போது தான் கதையில் வெடித்துள்ளது. ரோஹினி ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற உண்மை இப்போது குடும்பத்தினருக்கு தெரியவர விஜயா அவர்களுக்கு விவாகரத்து வாங்கும் வரை சென்றுவிட்டார்.
அவர்களின் பிரச்சனை ஒருபக்கம் செல்ல இப்போது இன்னொரு கஷ்டம் அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், சிந்தாமணி கூறிய ஐடியாவை வைத்து அண்ணாமலையின் போலி கையெழுத்து போட்டு வீட்டுப் பத்திரித்தை விஜயா-மனேஜ் திருட்டுத்தனமாக வீட்டில் மறைத்து வைக்கிறார்கள்.
நீது ரவியை காதலிப்பதாக கூற கோபத்தில் ஸ்ருதி தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். நீதுவிடம் மீனா-முத்து பேச அவர் பிடிக்கொடுப்பதாக தெரியவில்லை.

அதற்குள் ஸ்ருதி அம்மா அண்ணாமலை வீட்டிற்கு வந்து வழக்கம் போல் மோசமாக பேச முத்து-மீனா பதில் கொடுக்கிறார்கள். என் மகளுக்கு ஏதாவது நடந்தால் உங்களை சும்மா விட மாட்டேன் என மிரட்டிவிட்டு செல்கிறார்.

உடனே மீனா நான் ஸ்ருதியிடம் பேசுகிறேன் என அவரது அம்மா வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஸ்ருதி மீனாவின் குரல் கேட்டதும் கதவை திறந்து அவரை மட்டும் உள்ளே வரக் கூறுகிறார்.
ஸ்ருதி மீனாவிடம், ரவி இனி அந்த ரெஸ்டாரன்ட்டில் வேலை செய்யக் கூடாது. நீதி என்னிடம் வந்து ரவியை லவ் பண்ண மாட்டேன், அவரை இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என கூற வேண்டும். இதுவரை அவள் செய்ததற்கு எல்லாம் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்.

ஆனால் ஸ்ருதி சொல்வது போல் நீது மன்னிப்பு கேட்பாரா என்பது தெரியவில்லை. அடுத்து கதையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.