முத்துவை பற்றி சொல்ல சொல்ல அருண் செய்த வேலை, ஆனால் சீதா... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, கடந்த வாரம் எபிசோடில் சீதா-அருணிற்கு மீனா திருமணம் செய்து வைத்த விஷயம் வெளிவந்தது.
இதனால் கோபப்பட்ட முத்து, வீட்டிற்கு வந்த மீனாவை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லிவிட்டார். மீனா அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மீனா வீட்டில் சீதா முதற்கொண்டு முத்து பற்றி பேச அருண் முதலில் அவனை இந்த குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என கோபப்படுகிறார்.
இன்றைய எபிசோட்
சீரியலின் இன்றைய எபிசோடில், வழக்கம் போல் ரோஹினி-மனோஜ் சண்டை நடக்கிறது. பிறகு சீதா மாமியார் வீட்டிற்கு கிளம்ப தயாராக அவரை பார்க்க வீட்டு ஓனர், அக்கம் பக்கத்தினர் வருகின்றனர்.
அவர்கள் வந்ததில் இருந்து முத்துவை பற்றி பெருமையாக பேச அருண் செம கோபப்படுகிறார். முத்துவை போல நீங்கள் இருக்க வேண்டும் என கூற அவர்களுக்கு எந்த பதிலும் கூறாமல் அருண் பேச்சை மாற்றுகிறார்.
ஆனால் சீதா, தனது மாமாவின் ஆசீர்வாதம் இல்லாமல் எப்படி கிளம்புவது என அவருக்கு போன் செய்து பேசுகிறார்.