சீதா குடும்பத்தால் அழுது புலம்பும் முத்து மற்றும் மீனா... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
முத்து-மீனா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அளவு பாசம் வைத்துள்ளனர்.
இதனால் பிரிந்து இருந்தவர்கள் ஒன்றாக இணைந்துவிட்டார்கள், பாசத்தையும் கொட்டி தீர்த்துள்ளார்கள். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
அவர்கள் அந்நியோனமாக இருந்ததை பார்த்து ஸ்ருதியும் ரவியிடம் அதனை கூறி சந்தோஷப்படுகிறார். பின் மீனா, சீதா வீட்டிற்கு மாப்பிள்ளை விருந்திற்காக செல்கிறார். அங்கு சீதாவின் குடும்பத்தினரை அவரது மாமியார் மரியாதையுடன் நடத்துகிறார்.
அதனை பார்த்து மீனா மிகவும் வருத்தப்படுகிறார்.
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், மீனா, சீதா வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் முத்துவிடம் கூறுகிறார்.
பின் முத்து உனக்கு மாமியார் பாசமும், எனக்கு அம்மா பாசமும் எப்போதும் கிடைக்கப்போவதில்லை என இருவரும் வருத்தப்படுகிறார்கள்.

மன்னிக்கவே முடியாது; உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம் - கேரள நர்சுக்கு மரண தண்டனை உறுதி? IBC Tamilnadu
