மனோஜை கட்டிப்போட்டு ரூமில் அடைத்த குடும்பம், கதறும் ரோஹினி.. இது தேவையா, சிறகடிக்க ஆசை கலகலப்பு எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, கதையில் இப்போது விஜயா நடனப்பள்ளியில் நடந்த விஷயம் தான் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிறது.
இன்றைய எபிசோடில் க்ரிஷை அவரது பாட்டி பார்க்க அழைத்து செல்ல முத்து-மீனா கிளம்புகிறார்கள். ஆனால் விஜயா இது முக்கியமான விஷயமா என ரோஹினியை அழைத்து செல்ல கூறுகிறார்.
பின் மருத்துவமனையில் ரோஹினி, அவரது அம்மா, க்ரிஷ் காட்சிகள் இடம்பெறுகின்றன. க்ரிஷை அண்ணாமலை குடும்பம் சந்தோஷமாக பள்ளிக்கு அனுப்பும் காட்சிகள் வருகின்றன.
கடைசியில் விஜயாவை பார்க்க சிந்தாமணி, ஸ்ருதி அம்மா ஆகியோர் வருகிறார்கள்.
புரொமோ
சீரியல் நாளைய எபிசோடின் புரொமோவில், முத்துவை விட தான் சிறந்தவன் என்பதை காட்ட அந்த பெண் வீட்டிற்கு மனோஜ் மற்றும் ரோஹினி பேச செல்கிறார்கள்.
அங்கு சென்ற இந்த பிரச்சனைக்கு நான் ஒரு வழி கூறுகிறேன் என கர்ப்பத்தை கலைக்க கூறுகிறார். இதனை கேட்ட பெண் வீட்டார் மனோஜை கட்டி ஒரு அறையில் அடைக்கிறார்கள், ரோஹினி அவர்களிடம் கெஞ்சுகிறார்.