க்ரிஷ் விஷயத்தில் சிக்கப்போகும் ரோஹினி, முத்து சொன்ன விஷயம்.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
இந்த வாரம் விஜய் டிவி சீரியல்கள் அனைத்துமே சூப்பரான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து-மீனா இருவரும் சேர்ந்து விஜயா பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்கள். இன்றைய எபிசோடில் முத்து இரு வீட்டாரிடம் பேசி எப்படியோ திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.
பின் அவர்கள் மனோஜை கட்டி வைத்துள்ள விஷயத்தை கூற முத்து ஷாக் ஆகிறார். பின் தனது அண்ணன் செய்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்கிறார். மனோஜ் மற்றும் ரோஹினி இப்படி யோசித்ததற்கு முத்து-மீனா செமயாக திட்டுகிறார்கள்.
இன்னொரு பக்கம் விஜயா தனது பிரச்சனை தீர மண் சோறு சாப்பிடுகிறார், அந்த இடத்தில் மீனா அம்மா வர வழக்கம் போல் அவரை மோசமாக பேசுகிறார்.
புரொமோ
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், ரோஹினி, க்ரிஷை தனது அறைக்குள் அழைத்து பீட்சாவை சாப்பிட வைக்கிறார்.
அத்னை கண்ட மீனா விஷயத்தை முத்துவிடம் கூறுகிறார். முத்துவோ, பார்லர் அம்மா ஏதோ பெரிய விஷயத்தை மறைக்க இப்படியெல்லாம் செய்கிறது.
ஒருநாள் அவர் பற்றிய உண்மை வெளியே வரும் என கூறுகிறார், இதனை கேட்டு ரோஹினி ஷாக் ஆகிறார்.

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
