ஆபரேஷன் நல்லபடியாக நடக்க முத்து செய்த காரியம், கண்ணீரில் மீனா... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் குடும்ப கதையாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இப்போது கதையில் 3 ஜோடியின் பிரச்சனைகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
முத்து-மீனா, சிந்தாமணியால் வயிற்றில் கத்தி குத்து வாங்கியதால் மீனாவிற்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதனால் மருத்துவர் அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார். அப்படி ஆபரேஷன் செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூற இருவரும் ஆபரேஷன் செய்ய ஒப்புக் கொள்கிறார்கள்.

அடுத்து அருண்-சீதா, அருண் சீதா என்னை தேடி வருவார் என இருக்க, முத்துவோ சீதாவிடம் அவர் வந்து மன்னிப்பு கேட்கும் வரை அனுப்ப மாட்டேன் என ஒரு முடிவோடு இருக்கிறார்.
கடைசியாக மனோஜ், இவரது பிரச்சனை தீராப் பிரச்சனையாக உள்ளது. ரோஹினியிடம் இப்போதைக்கு அது என் குழந்தை தான் என யாரிடமும் கூற வேண்டாம் என கூறியுள்ளார். அதேபோல் கனகா வீட்டிலும் இப்போதைக்கு என்னால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்று கூறிவிட்டார்.

மனோஜ் கல்யாணம் எப்போது குடும்பத்திற்கு தெரிய வரும், மனோஜ் குழந்தை தான் என எப்போது உறுதியாகும் என தெரியவில்லை.
இதற்கு இடையில், மனோஜ் மீது சந்தேகம் கொண்ட விஜயா, ரோஹினி வயிற்றில் இருக்கும் கருவை அழிக்க பிளான் போடுகிறார்.

புரொமோ
சீரியல் கதைக்களம் ஒரே பிரச்சனையாக செல்ல நாளை எமோஷ்னல் காட்சிகள் இடம்பெற இருக்கின்றன. அதாவது மீனாவிற்கு உடல்நிலை சரியாக வேண்டும் என முத்து சில தினங்களாக அங்கப்பிரதட்சணம் செய்கிறாராம்.
அவர் இந்த பரிகாரம் செய்யும் போது மீனா பார்த்து கண்ணீர்விட்டு அழுதுகொண்டே நிற்கிறார்.
